< Back
மாநில செய்திகள்
கடலூரில்கண்ணாடியால் கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலைகாதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில்கண்ணாடியால் கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலைகாதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி

தினத்தந்தி
|
11 May 2023 12:15 AM IST

கடலூரில் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்த விரக்தியில், கண்ணாடியால் கழுத்தில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஒருதலைக்காதல்

கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சக்தி ஆகாஷ் (வயது 21). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் சக்தி ஆகாஷ் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சக்தி ஆகாஷ், வீட்டின் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை உடைத்தார். பின்னர் அதில் இருந்த உடைந்த கண்ணாடியை எடுத்து தனது கையிலும், கழுத்திலும் குத்திக் கொண்டார். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதில் சக்தி ஆகாஷ் மயங்கி விழுந்தார்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சக்தி ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்த விரக்தியில் வாலிபர், கண்ணாடியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்