< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
இளம்பெண் தற்கொலை
|5 April 2023 9:45 PM IST
திண்டுக்கல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள ஜம்புலியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (31). இந்த தம்பதிக்கு ரோகிதா ஸ்ரீ (4) என்ற மகளும், எழில் அமுதன் (1) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த பாக்கியலட்சுமி, நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், ஏட்டு நல்லுசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.