நாமக்கல்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள பெரமாண்டபாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன் என்பவரது மனைவி சரஸ்வதி (வயது 71). இவர்களது 2-வது மகன் சுரேஷ் (21). இவர் லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும், மேலும் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதில் மனவேதனையில் இருந்த சுரேஷ் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்தார். இது குறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தனா். இதன் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினர் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.