< Back
மாநில செய்திகள்
சிதம்பரத்தில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலைஉடல் அடக்கம் செய்வதை போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரத்தில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலைஉடல் அடக்கம் செய்வதை போலீஸ் தடுத்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Dec 2022 1:16 AM IST

சிதம்பரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


சிதம்பரம்,

குடும்ப பிரச்சினை

சிதம்பரம் அடுத்த சிவாயம் கிராமம் பெரியத்தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி முரதியா. இவர்களுக்கு ஹரிசுதன் (9), ஹரிஷ்னி (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக சக்திவேல் நேற்று முன்தினம் மாலையில வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேல் இறந்த நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை, அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அவர்கள் உள்ளே சென்று தூக்கில் இருந்து உடலை இறக்கியதாக தெரிகிறது. இதன் பின்னர், உறவினர்களுக்கு இறப்பு செய்தி சொல்லி, அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

போலீசில் தாய் புகார்

இந்த நிலையில், சக்திவேலின் தாய் செல்வராணி (56), தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் என்ன என்கிற உண்மை நிலை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்