< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
|22 Oct 2023 12:50 AM IST
வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று கொண்டாநகரம் ரெயில்வே கேட் அருகில் நவீன்குமார் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.