< Back
மாநில செய்திகள்
தாயை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரம்: ரவுடியின் வயிற்றில் பீர்பாட்டிலால் குத்திய வாலிபர்
சென்னை
மாநில செய்திகள்

தாயை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரம்: ரவுடியின் வயிற்றில் பீர்பாட்டிலால் குத்திய வாலிபர்

தினத்தந்தி
|
16 Feb 2023 1:22 PM IST

தாயை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரத்தில் ரவுடியின் வயிற்றில் பீர்பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 26). ரவுடியான இவர், புளியந்தோப்பு போலீஸ் நிலைய பழைய குற்றவாளி ஆவார். இவர், ஆட்டுதொட்டியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று மதியம் ஆட்டுதொட்டியில் இருந்த தனது ரிக்சாவை தள்ளி விடச்சொல்லி வள்ளி என்பவரிடம் கேட்டார். அதற்கு வள்ளி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட், வள்ளியை தகாத வார்த்தையால் திட்டி அனுப்பினார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட வள்ளியின் மகன் சரவணன்(22), கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் உடைந்த பீர்பாட்டிலால் ரவுடி டேவிட்டின் வயிற்றில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்