< Back
மாநில செய்திகள்
சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி வாலிபர் அசத்தல்
தேனி
மாநில செய்திகள்

சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி வாலிபர் அசத்தல்

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

போடியல் சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி வாலிபர் அசத்தினார்.

போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், பல்வேறு வகையான பொருட்களில் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். சாக்பீசிலும் யானை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள், மனிதர்களின் உருவங்களை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி அசத்தினார். அந்த சிற்பம் ஒரு செ.மீ. அகலம், 3.5 செ.மீ. உயரத்தில் இளைஞர் ஒருவர் தேசிய கொடியை இரண்டு கைகளில் ஏந்தி நிற்பது போன்று இருந்தது. இந்த சிற்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிற்பத்தை உருவாக்க ¾ மணி நேரம் ஆனது என்று பிரேம்குமார் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்