< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
27 Nov 2022 3:38 PM IST

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி பந்தனா மாகி மற்றும் அவருடைய கணவர் அஜய் மண்டல்குமார் ஆகிய இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து அங்குள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவரும் இவருடைய கணவரும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி பலமுறை பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்த பந்தனா மாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்