< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

31 Oct 2023 3:13 AM IST
அன்னூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் ஸ்ரீராம்(வயது 21). அதே பகுதியில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் தன்னிடம் இருந்த பணம் போக கடனுக்கு வாங்கிய பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் இழந்தார். இதனால் அவர்களிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் பணத்தை திரும்ப கேட்டு அவரது நண்பர்களும், உறவினர்களும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஸ்ரீராம், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.