திண்டுக்கல்
போக்சோவில் வாலிபர் கைது
|நத்தம் பகுதியில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 19). இவருக்கும், நத்தம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து நத்தம் வந்த முருகானந்தம், ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் பாபநாசத்தில் உள்ள தனது வீட்டில் சிறுமியுடன் முருகானந்தம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். இதற்கிடையே முருகானந்தம், சிறுமியுடன் நத்தம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்தார். இதனைக்கண்ட போலீசார் சிறுமியையும், முருகானந்தத்தையும் மடக்கி பிடித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.