< Back
மாநில செய்திகள்
அரியபெருமானூரில்விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரியபெருமானூரில்விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

தினத்தந்தி
|
14 Aug 2023 6:45 PM GMT

அரியபெருமானூரில் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டத்தின் மூலம் நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சைமன் தலைமை தாங்கி வேளாண்மை திட்டங்கள் மற்றும் கிடங்கில் உள்ள மானிய விலை இடுபொருட்கள் வாங்கி பயன்பெறுவது குறித்து பேசினார். கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர் சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டு நீடித்த நவீன Aகரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கரும்பு பெருக்கு உதவியாளர் இளங்கோ செய்திருந்தார்.இதில் முன்னோடி விவசாயிகள் மற்றும் கரும்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்