< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு - 104 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|3 Jun 2022 3:12 PM IST
இயந்திர கோளாறு குறித்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இழுவை வாகனம் மூலமாக நடைமேடையில் விமானம் நிறுத்தப்பட்டது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இழுவை வாகனம் மூலமாக நடைமேடையில் விமானம் நிறுத்தப்பட்டது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 104 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து பயணிகள் மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.