< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு - கனிமொழி எம்.பி. கண்டனம்
|14 Feb 2024 8:13 AM IST
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
2021ல் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல.
விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதை ஏற்க முடியாது. காவல்துறையின் நடவடிக்கையை கண்டிப்பதோடு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் . என தெரிவித்துள்ளார்.