< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க குழு அமைப்பு...!
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க குழு அமைப்பு...!

தினத்தந்தி
|
15 Sept 2022 3:13 PM IST

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற் சிலைகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 60-க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்