கரூர்
தேக்கு-வாழை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
|தேக்கு-வாழை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (வயது 47), சிவக்குமார் (49), அம்சா (57). விவசாயிகளான இவர்கள் அனைவரும், தங்களுக்கு சொந்தமான ேதாட்டங்களில் தேக்கு, வாழைமரங்கள், பருத்தி செடிகளை பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ேதாட்டங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் 200 தேக்கு மரங்கள், 450 வாழை மரங்கள், சுமார் அரை ஏக்கர் பருத்திச் செடிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.