< Back
மாநில செய்திகள்
தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பணி முக்கியமானது
சிவகங்கை
மாநில செய்திகள்

தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பணி முக்கியமானது

தினத்தந்தி
|
7 Sept 2022 12:36 AM IST

தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் பணி முக்கியமானது என்று துணைவேந்தர் ரவி கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவரங்கில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராஜா மோகன் வரவேற்றார். துணைவேந்தர் ரவி பேசும் போது,

ஆசிரியர்கள் நாட்டில் தூண்களாக விளங்குபவர்கள் தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கற்பித்தல் பணி என்பது வெறும் தொழிலாக கருதப்படக் கூடியது அல்ல.அதற்கு மேலாக ஒரு வாழ்வியல் முறையாக பின்பற்றக்கூடியது என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி பேசினார். விழாவில், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது .25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராமுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்