< Back
மாநில செய்திகள்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 1:29 AM IST

பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டை எதிர்ப்பதாக கூறியும், மாணவர் மற்றும் ஆசிரியர் விரோத போக்கை எதிர்ப்பதாக கூறியும் பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் சேவியர் செல்வகுமார், அரசு கல்லூரி ஆசிரியர் கழக துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி மண்டல அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலாளர் சார்லஸ் செல்வராஸ் மற்றும் இரு சங்கங்களின் மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும்என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்