< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 10:44 PM IST

ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கடந்த 2 நாட்களாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. வருகிற 9-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டி சென்னையில் தொடர்ந்து 7-வது நாட்களாக பட்டினி போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடியில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்