< Back
மாநில செய்திகள்
களக்காட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

களக்காட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
7 Oct 2023 2:23 AM IST

களக்காட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களக்காடு:

'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி களக்காட்டில் டிட்டோஜாக் அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி மாவட்ட தலைவர் ஜாண் கென்னடி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சிதம்பரநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்