< Back
மாநில செய்திகள்
திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 8:47 PM IST

திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நேற்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நேற்று திருத்தணி வட்டார கல்வி அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்