திருவாரூர்
கல்லூரிகளில் ஆசிரியர்கள்- ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
|3 மாத சம்பளம் வழங்கக்கோரி கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 மாத சம்பளம் வழங்கக்கோரி கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3 மாதமாக சம்பளம் வழங்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆங்கில துறைத் தலைவர் யோகபிரகாசம் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது. இரவு முழுவதும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
நன்னிலம்
நன்னிலம் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ பேராசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் 30 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கவில்லை எனவே கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே வகுப்பை புறக்கணித்து வாயில் கருப்பு துணி அணிந்து நூதன முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.