< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 July 2022 9:48 PM IST

விளாத்திகுளத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

எட்டயபுரம்:

விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச்செயலாளர் மயில் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் வட்டார தலைவர் லூர்து பாக்கிய ஸ்டீபன், செயலாளார் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ரவிந்திரராஜன் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் புதூரிலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்