< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 July 2022 10:58 PM IST

வேலூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிர்வாகி ரஞ்சன் தயாளதாஸ் வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் எஸ்.பிரபாகரன் கோரிக்கை குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்