கன்னியாகுமரி
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வள்ளிவேலு உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.