< Back
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

நாமக்கல்லில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில், ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, உதவி தலைவர் மகேஷ், பொருளாளர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 2018-ம் ஆண்டுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினி பயிற்றுனர் பணியிடங்களை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்