< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|9 Sept 2023 12:15 AM IST
நாகர்கோவிலில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகர்கோவில் வட்டாரம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் மார்டின் பிரேம் தலைமை தாங்கினார். தலைவர் சேக் முஜிபர் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.