< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|9 Sept 2023 12:45 AM IST
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வித் துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, முருகேசன், வட்டார செயலாளர் அருள் முருகன், பொருளாளர் அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.