< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆசிரியர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|5 Sept 2024 9:18 AM IST
ஆசிரியர் தினத்தையொட்டிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (5.9.2024) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஆசிரிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.