விருதுநகர்
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா
|விருதுநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா
விருதுநகர் வி.வி.வி பெண்கள் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கல்லூரி பேரவை துணைச்செயலாளர் கார்த்திகா வரவேற்றார். முன்னாள் கல்லூரி பேராசிரியர் டாக்டர் வள்ளியம்மாள் ஆசிரியர் பணிபற்றி பேசினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதி வரவேற்றார். கல்லூரி செயலர் சர்ப்பராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். கல்லூரி பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.
வாழ்த்து
விருதுநகர் முஸ்லிம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நோபிள் பள்ளி
விருதுநகர் நோபிள்மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி சேர்மன் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் டாக்டர் வெர்ஜின் இனிகோ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவினை பள்ளி மாணவ, மாணவிகள் தொகுத்து வழங்கினர். விழாவிற்கு வந்திருந்தோரை மாணவி சக்தி ஹரிண்யா வரவேற்றார். முடிவில் மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினார்.