விருதுநகர்
பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா
|சிவகாசி பகுதியில் பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மேட்டமலை பி.எஸ்.என்.எல்.கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ராஜீ, கல்லூரி செயலர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முதலாம் ஆண்டு மாணவி மதுமிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினரை கல்லூரி பேராசிரியர் ஜெயகணேசன் அறிமுகம் செய்தார்
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி பாலபத்திரராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் கலந்து கொண்டு, இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும், மாணவர்களை நல்ல சான்றோர் ஆக்குவதே ஆசிரியரின் கடமை என்பதையும் வாழ்க்கையில் வெற்றி பெற மாணவர்கள் தொடர்ந்து படிக்கவேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார்.. மாணவர்கள் பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி சிறப்பித்தனர். பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து ெகாண்டு ெவற்றி பெற்றனர். முடிவில் மாணவர் செல்வகுமார் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.ஆர். பள்ளி
சிவகாசி ஆர்.எஸ்.ஆர். பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாணவர்கள் வரவேற்றனர். பின்னர் முதல்வர் முத்துலட்சுமி கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பில் பல்வேறு நினைவு பரிசுகள் வாழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பந்து வீசுதல், பலூன் வெடித்தல், பணம் எண்ணுதல் உள்ளிட்ட வேடிக்கையான விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாணவர்கள் செய்திருந்தனர். இதை தொடர்ந்து கோகுலாஷ்டமி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.