< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
|6 Sept 2023 11:57 PM IST
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் கடந்த கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம், பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிமுத்து, அவினாசிலிங்கம், தியாகி பெரியசாமி, நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமரன், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.