< Back
மாநில செய்திகள்
ஜமீன் அகரம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஜமீன் அகரம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
6 Sept 2022 5:29 PM IST

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் மணிமேகலை, சுடர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியர் அருண்குமார் வரவேற்றார்.

ஆசிரியர் தின வரலாறு, ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு, ஆசிரியர்களின் பெருமைகள், மாணவர்களின் கடமைகள் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் உரை நிகழ்த்தி .கவிதை வாசித்தனர். ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசாக எழுதுகோல் வழங்கினர்.

மாணவர்களின் வாழ்த்தினை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், ஒழுக்க நெறிக் கருத்துகளையும் வழங்கி பேசினர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இடைநிலை ஆசிரியர் மார்கிரேட் மேரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்