திருவண்ணாமலை
திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆசிரியர் தின விழா
|திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படத்துக்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டி.ஏ.எஸ்.முத்து தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஆனந்தராஜ் மற்றும் இணை பேராசிரியர்கள துரை, பிரபு ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இளங்கோவன் தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.