< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
7 Sept 2023 12:15 AM IST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கல்வியியல் புல முதல்வர் குலசேகரபெருமாள் முன்னிலை வகித்தார். விழாவுக்கு வந்த அனைவரையும் கலை புல முதல்வர் விஜயராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இதுதவிர பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் சிறந்த ஆசிரியா்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்