ராணிப்பேட்டை
அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
|அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது
அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா, கல்லூரி 10-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிறுவனர் எஸ்.ராமதாஸ் கொரோனா காலத்தில் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டினார். செயலாளர் ஜி.தாமோதரன் கூறுகையில், ஆசிரியர்கள் தங்கள் துறையில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி சமுதாயத்துக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவ வேண்டும் என்றார்.
இதில் கல்லூரி முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி சாண்டில்யன், இயக்குனர்கள் பிரசாந்த், கிஷோர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு இனிப்புகள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.