< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தின விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
8 Sept 2022 12:18 AM IST

டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும செயலாளர் டி.எஸ். ரவிகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ரவிகுமார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் ஆசிரியர்கள்- மாணவர்களிடையே என்றும் இணக்கமான சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான், ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. இந்த உலகிற்கு நல்லதொரு குடி மகனை வழங்கும் பெருமை ஆசிரியருக்கே பொருந்தும் என கூறினார். பின்னர் ஆசிரிய- ஆசிரியைகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார். முன்னதாக டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். முடிவில் பேராசிரியர் வீரமணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்