ராணிப்பேட்டை
அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
|அரக்கோணம் ரோட்டரி சங்கம், செய்யூர் ஊராட்சி மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது
அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் செய்யூர் ஊராட்சி மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா செய்யூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்க செயலாளர் ஆர்.பி.ராஜா தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் லட்சுமிபதி, பி.ஆர்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, அவினாசி கண்டிகை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயா, செய்யூர் சி.எஸ்.ஐ.பள்ளி தலைமை ஆசிரியை ஜேக்லின் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கு செய்யூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர். ஜோதிலட்சுமி ராஜா சால்வை அணிவித்து மரியாதை செய்து, அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் நினைவு பரிசினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், எஸ்.எம்.சி. கல்விக்குழு தலைவர் கீதா, துணைத்தலைவர் துர்கா மற்றும் கல்வியாளர் ஆதிகேசவலு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.