< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தின விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
7 Sept 2022 12:47 AM IST

டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தாளாளர் தனபால், செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் முரளி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக கம்ம நாயுடு மகாஜன சங்க செயல் தலைவர் மோகன், உதவித் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்புரையாற்றி ஆசிரியர், ஆசிரியைகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வனிதா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்