< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தின விழா
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
5 Sept 2022 12:54 AM IST

ஸ்ரீவி்ல்லிபுத்தூர் தியாகராசர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவி்ல்லிபுத்தூர் தியாகராசர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவில் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் கலந்து கொண்டு 33 மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தலைமை தாங்கினார். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சிவா, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் தன்னார்வலர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மகாலட்சுமி, சுமதி, லாவண்யாதேவி, சிவகாமி, ஈஸ்வரி, கவிதா, சிவரஞ்சினி, கஸ்தூரி, முத்துச்செல்வி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் மாலதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்