< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
6 Sept 2023 1:45 AM IST

அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

கூடலூர்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் அய்யப்பன், உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்பட ஆசிரியர்களுக்கு பூங்கொத்துகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 13 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்ரீ மதுரை ஊராட்சி குங்கூர்மூலா அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் சுனில் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களை கவுரவித்தனர்.

மேலும் செய்திகள்