திருநெல்வேலி
ஆசிரியர் தின விழா
|சமூகரெங்கபுரம் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
வள்ளியூர்:
சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின், பட்டதாரி ஆசிரியர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறித்தும், ஆசிரியர் தினம் குறித்தும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி சார்பில் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் உட்பட பல்வேறு உபகரணங்களை கல்லூரி தலைவர் லாரன்ஸ் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.