< Back
மாநில செய்திகள்
ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
6 Sept 2022 1:41 AM IST

ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'வகுப்பறைகளில்தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது' என்று சொன்ன முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான்.

தன்னிடம் கற்றுக்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு போனாலும் அதைப் பார்த்து மகிழ்வதும் வாழ்த்துவதும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உரிய தனி குணமாகும்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மட்டுமின்றி வாழ்வின் எத்தனையோ அம்சங்களை நமக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொருவரையும் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவில் நிறுத்தி வணங்கி, வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். நம் வாழ்வின் எல்லா வெற்றிகளுக்கும் 'குரு வணக்கம்' எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்