சேலம்
ஆசிரியர் பணி இடைநீக்கம்
|ஜலகண்டாபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.
ஜலகண்டாபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சவுரியூரில் நவோதயா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சரவணகுமார் (வயது 44) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த பள்ளியில் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சரவணகுமார் அந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான கணித ஆசிரியர் சரவணகுமாரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.