< Back
மாநில செய்திகள்
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
15 July 2022 2:12 PM IST

திருவள்ளூர் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்டம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 50). இவரது மகள் ராதிகா (26). முதுநிலை பட்டதாரியான இவர் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ராதிகா தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை ராமதாஸ் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்