< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு

தினத்தந்தி
|
2 Feb 2023 6:07 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 2-க்கான இணையவழி போட்டித் தேர்வு வருகிற 03-02-2023 முதல் 14-02-203 வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 18 ஆயிரத்து 906 தேர்வர்கள் 9 மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு நடைபெறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேவர்கள் முற்பகல் தேர்விற்கு காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 12:30 மணிக்குள்ளும் தேர்வுக்கூடத்திற்குள் இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்