ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு
|ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
செப்டம்பர் 10 முதல் 15-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தேர்வு இரு வேளைகளில் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை, நுழைவு சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கணினி வழித் தேர்வுக்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.