நாமக்கல்
பள்ளிபாளையத்தில் டாக்சி டிரைவர்கள் போராட்டம்
|நாமக்கல்லில் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல்லில் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
பள்ளிபாளையத்தில் உள்ளூர் கால் டாக்சி டிரைவர்களுக்கும், ஈரோட்டில் இருந்து வரும் கால் டாக்சி டிரைவர்களுக்கும் ஆட்களை ஏற்றுவதில் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, இந்த பிரச்சி்னை தொடர்பாக நாங்கள் பேசுவதை விட, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேசினால்தான் நன்றாக இருக்கும். எனவே வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் சென்று பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து வரும் கால் டாக்சி டிரைவர்கள் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் பள்ளி பாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.