< Back
மாநில செய்திகள்
நாமக்கல் நகராட்சியில்  தீவிர வரி வசூல் முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

தினத்தந்தி
|
2 Jun 2022 4:01 PM GMT

நாமக்கல் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் 2021-22-ம் ஆண்டுக்கான குடிநீர் கட்டணம் ரூ.1¼ கோடியும், தொழில் வரி ரூ.40 லட்சமும் பொதுமக்களிடம் இருந்து வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதை வசூல் செய்ய தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் நகராட்சி வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) பிரசாத் தலைமையில் பில் கலெக்டர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் நகராட்சியில் சுமார் 26 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி, குடிநீர் இணைப்பை துண்டிக்காமல் நகராட்சி அலுவலர்கள் வரி வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 15-ந் தேதிக்குள் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரி தொகையை நகராட்சியில் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்