< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் விற்பனையாளர் பலி
விருதுநகர்
மாநில செய்திகள்

டாஸ்மாக் விற்பனையாளர் பலி

தினத்தந்தி
|
17 Oct 2023 1:39 AM IST

விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலியானார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னசெட்டி குறிச்சியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 44). இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு சின்ன செட்டிகுறிச்சியில் உள்ள கோவிலில் குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு விட்டு குடும்பத்தினரை பஸ்சில் ஏற்றிவிட்டு ஜெயராம் மோட்டார் சைக்கிளில் பந்தல்குடியில் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சேதுராஜபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு பாலத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராமின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்