< Back
மாநில செய்திகள்
கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணிக்கு  மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: மது பிரியர்கள் ஏமாற்றம்
மாநில செய்திகள்

கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: மது பிரியர்கள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
11 March 2023 10:28 PM IST

முன் அறிவிப்பின்றி திடீரென கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடலூர்,

என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9-ந் தேதி விரிவாக்க பணியை தொடங்கியது. ஆனால் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணியளவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

முன் அறிவிப்பின்றி திடீரென கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் செய்திகள்